“செமட்ட செவன” எனும் ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஏறாவூரில் 82 வறிய குடும்பங்களுக்கு வீடுகளை நிருமாணித்துக் கொடுப்பதற்கான அடிக்கல்லை வெள்ளிக்கிழமை 19.05.2017 கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நாட்டி வைத்தார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக அரச உதவியாக 10 பேர்ச்சஸ் காணியும், 5 இலட்ச ரூபாவும் வழங்கப்படுகின்ற அதேவேளை பயனாளிகளான வறிய குடியிருப்பாளர்கள் இரண்டரை இலட்ச ரூபாவைச் செலவு செய்து இந்த வீட்டை நிருமாணிக்கும் வகையில் செமட்ட செவன ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம் நாடு பூராகவும் அமுலாக்கப்படுகின்றது.
அந்த வகையில் ஏறாவூர் தாமரைக்கேணி கிராமத்தில் 21 வீடுகளும், மீராகேணி ஸம்ஸம் கிராமத்தில் 25 வீடுகளும், ஸக்காத் கிராமத்தில் 36 வீடுகளும் நிருமாணிக்கப்படவிருக்கின்றன.
ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உட்பட அதிகாரிகளும் பயனாளிகளும் பிரதேச பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
வீட்டுத் திட்டத்திற்குச் சமாந்தரமாக தலா ஒரு வீட்டுக்கு குறைந்தது ஒரு மரம் எனும் திட்டத்தையும் முதலமைச்சர் ஆரம்பித்து நாட்டி வைத்தார்.
0 Comments:
Post a Comment