புலம்பெயர் உறவுகள் மூலம் கிடைகின்ற உதவிகளுக்கு, முறையாக நிதி முகாமைத்துவம் செய்து வெளிப்படைத்தன்மையாக அவர்களுக்கு எடுத்துக்காட்டுவதோடு மட்டுமல்லாமல் உதவி செய்கின்றவர்களுக்கு பாராட்டி நன்றி கூறவேண்டும். எனவே வெளிப்படைத் தனை;மையதாக நடந்து உதவி செய்பவர்களை நன்கு பாராட்டினால் அவர்கள் மென்மேலும் உதவுவதற்கு முன்வருவார்கள்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கிராமத்தில் பால் மணல் மேட்டில் வீற்றிருக்கும், ஸ்ரீ பால முருகன் ஆலயத்திற்கான ஆவர்த்தன பிரதிஸ்ட்டை அடிக்கல் நாடும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (09) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..
கோயிலோடு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை இயன்றவரை வெளியில் கொண்டு செல்லாமல் கோயிலுக்குள் தீர்த்துக் கொள்ளுங்கள். கோயில் விடையங்களை கோயிலுக்குள் தீர்வுகாண்டு அதன்மூலமாக கிராமத்தின் ஒற்றுமையை ஏற்படுத்துகின்ற விடையம் என்பது கிராமத்தின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும். இவற்றினை விடுத்து கோயில் பிரச்சனைளை, பிரதேச செயலகம், நீதிமன்றம் போன்றவற்றிற்குக் கொண்டு செல்வது ஆளுமையின் குறைபாடாகும். எனவே பிரச்சனைகள் வரும்போது அவற்றை கோயில் மட்டத்திலே தீர்வுகண்டால்தான் அங்கு ஆளுமையுள்ள நிருவாகம், தர்மகத்தாக்கள் போன்றோர் உருவாக்கப்படுவார்கள்.
தமிழர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சாதிகள், குடிகள், வகுத்துவார், போன்ற விடையங்களை கோளிலில் பார்க்கின்ற. இவ்வாறான விடையங்கள் அனைத்தும் ஆiளுமையின்மை என்பைதையே காட்டுகின்றது. இந்துக்கள் என்றால் ஒற்றுமை என்பதையே பார்க்கின்றோம். மாறாக மேற்படி இவ்வாறு பிரிவுகளாக இப்பிரிவினைகளையோ அல்லது, வேறு விடையங்களையோ நாம் அரசியலில் பார்க்கவில்லை, தமிழர்கள் என்றே அனைவரையும் நாம் பார்க்கின்றோம்.
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என சொல்வார்கள் ஒரு கோயில்கூட இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றுதான் சொல்வார்கள். ஆனால் அதிகமான கோயில்களைக் கட்டுகின்றபோதும், சாகியக்கோயில்கள், வகுத்துவார் கோயில், குடும்பக்கோயில்களாக மாறி பிரச்சனைகள் அதிகரிக்கச் செய்கின்றன. என அவர் தெரிவித்தார்.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மார்கண்டு நடராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைத்தனர்.
0 Comments:
Post a Comment