23 Apr 2017

நோயாளர்களின் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

SHARE
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சத்திரை சிகிச்சை கிளினிக் செல்லும் நோயாளர்கள் அவர்கள் வளக்கமாக கிளினிக் சிகிச்சை பெறும் இடத்தில் அல்லாமால் மேற்படி வைத்தியசாலைக்கு எதிரேயுள்ள புற்றுநோய் சிகிச்சைக்குரிய கட்டடத் தொகுதியில் மேற்குறித்த சத்திரை சிகிச்சை கிளினிக் மாற்றப்பட்டுள்ளதால் தாங்கள் புற்று நோய்க்கும் உட்பட்டுள்ளோமா? என்ற அச்சம் எழுந்துள்ளதாக நோயாளர்கள் தம்மிடம் தம்மிடம் தெரிவித்ததாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை  ஞாயிற்றுக் கிழமை (23) தெரிவித்தார். 


சத்திரசிகிச்சை கிளினிக் பெற்றுவரும் தாம் வளமைக்கு மாறாக புற்றுநோய் வைத்தியசாலைக் கட்டடத் தொகுதியில் தமக்குரிய கிளினிக் சிகிச்சைகள் இடம்பெறுவதனால் தாம் அசௌகரியங்களுக்கும் உட்படுவதோடு குறித்த விளக்கமற்ற நோயாளர்களும், ஏனையோரும் புற்றுநோய்க்காகவா இந்நோயாளர்கள் கிளினிக்பெற வந்துள்ளார்கள் என்ற நேக்கத்தோடு பார்ப்பதாகவும், அவர்கள் தெரிவிப்பதாக மேற்படி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

நோயாளர்களின் இம்முறைப்பாடு தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரை தான் தொடர்பு கொண்டு கேட்டபோது…. 

இடவசதியின்மையால் சன நெரிசல் காரணமாகத்தான், மேற்படி கிளினிக் புற்று நோய் வைத்தியசாலைக் கட்டடத்தொகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், புதிய வைத்தியசாலைக் கட்டடத் தொகுதி ஒன்று கட்டப்பட்டு வருவதாகவும், அது முடிவுற்றதும் மேற்படி கிளினனிக் புதிய கட்டடத்திற்கு மாற்றப்படும் எனவும் அதுவரையில் தற்போது நடைபெறும் புற்று நோய் வைத்தியசாலைக் கட்டடத் தொகுதியில்தான் சத்திரசிகிச்சைக் கிளினிக் நடைபெறும் எனவும், வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களைப் பார்வையிட வருபவர்கள் வெயிலிலும், மழையிலும் வெளியில் காத்திருந்து வருகின்றார்கள் அவர்களும் அமர்ந்து இருப்பதற்குரிய ஏற்பாடுகளும் காலப்போக்கில் மேற்கொள்வுள்ளதாகவும்  மேற்படி வைத்தயசாலையின் பணிப்பாளர் உறுதியளித்ததாக கிழக்கு மாகாணவபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: