23 Apr 2017

பொதுமக்கள் இளைஞர்கள் என பலரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாவட்டத்திலிருந்து டெங்கு நோயை நாம் அடியோடு ஒளிக்கலாம்.வைத்திய அத்தியட்சகர் சுகுணன்

SHARE
டெங்கு எனும் நோயை நாம் அடியோடு அழிக்க வேண்டும், இதற்கு வைத்தியசாலைகள் மாத்திரமோ அல்லது சுகாதாரத் துறையினர் மாத்திரமோ முன்னின்று செயற்பட்டால் முடியாது பொதுமக்கள், இளைஞர்கள், யுவதிகள் என பலரும் ஒருமித்து ஒன்றிணைந்து செயற்பாட்டால் மிகவிரைவில் டெங்கு நோயை அடியோடு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து, இல்லாதொழிக்கலாம் என களுவாஞ்வாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். 


இவ்விடையம் தொடர்பில் ஞாயிற்றுக் கிழமை (23) கருத்து தெரிவித்த அவர்…. 

கிராம மட்டத்தில், பல பொது அமைப்புக்கள் இயங்குகின்றன, அவர்கள் அனைவரும் அவர்களது துறைசார்ந்த சேவைகளில் ஈடுபட்படாலும் , மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள டெங்கு நோயை அடியோடு அழிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இது சுகாதாரத்துறையினரால் மாத்திரம் முடியாது. கிராம மட்டத்திலுள் அனைவருக்கும் தலையாய கடப்பாடு உள்ளது எனவே கிராம மட்டங்களிலுள்ள பொது அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மிகவிரைவில் மட்டக்களப்பிலுள்ள டெங்கு நோயை இல்லாதொழிக்கலாம்.

எனவே மட்டக்களப்பு மாட்டத்திலுள்ள அனைத்து பொது சுகாரார வைத்தியப் பிரிவுகளிலுமுள்ள பிரதேசங்களில் பொது அமைப்புக்கள், பொது சுகாதார வைத்தியப் பிரிவினரோடு இணைந்து செயற்டுவார்களாயின் மட்டக்களப்பு மாவட்டத்தை டெங்கு நோய் அற்ற மாவட்டமாக மாற்றமுடியும் என  அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: