மட்டக்களப்பு கல்குடாவில் அமைக்கப்படவுள்ள மதுசார கருப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பான காலந்துரையடல் ஒன்று மட்டக்களப்பு நிபுணர் குழுவுக்கும் தமழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் வாதிகளுக்கும் இடையில் ஞாயிற்றுக் கிழமை (23) நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் மாவட்டத்தினை சேர்ந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்,மகாண சபை உறுப்பினர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், வியாழேந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை
மதுசார உற்பத்தி நிலையம் திறப்பது தொடர்பாக அரசியல்வாதிகளிடம் இருந்து வெளிவரும் வரும் எதிர்ப்பினை கருத்திற்கொண்டு குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உற்பத்தி நிலையம் தொடர்பான பூரண விளக்கம் நிபுணர் குழுவினால் முன்வைக்கப்பட்டதுடன் உற்பத்தி நிலையம் தொர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, அரியநேத்திரன், மாகாண சபை உறுப்பினரான இரா.துரைரெத்தினம் ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கும் இக் குழுவினரினல் பதிலளிக்கப்பட்டது.
இதனையடுத்து சில அரசியல்வாதிககள் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் வாக்குறுதியளித்துள்ள நிலையில் கலந்துரையாடல் நிறைவு செய்யப்பட்டது…

0 Comments:
Post a Comment