களுவாஞ்சிகுடி எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டு இயங்ககாத நிலையில் உள்ளமையால் பொது மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி கொண்டு இருப்பதாக எரிபொருள் பாவனையாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
களுவாஞ்சிகுடியில் சுமார் 50 வருடங்களாக இயங்கிவந்த மிகவும் பழமைவாய்ந்த இவ் எரிபொருள் நிரப்பு நிலையமானது. சுமார் ஆறு மாத காலமாக பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இதனால் களுவாஞ்சிகுடி, அதனை அண்டிய பிரதேச வாகன பாவனையாளர்கள்,விவசாயிகள், வெளியிடங்களில் இருந்து வரும்வாகன ஓட்டுனர்கள் என பலர் இதன் காரணமாக ஏமாற்றம் அடைந்த நிலையில் வேறு இடங்களுக்கு சென்று பலத்த சிரமத்தின் மத்தியில் தங்களது எரிபொருள் தேவையினை நிறைவேற்றி வருகின்றனர்.
மக்களுக்கு அத்தியாவசியமான தேவையை பூர்த்தி செய்கின்ற எரிபொருள் நிரப்பு நிலயகங்கள் கூடுதலாக தேவைப்படுகின்ற தற்காலத்தில் இவ் எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டு காணப்படுகின்றமைக்கான காரணம்யாது எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி திறப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றனர்
0 Comments:
Post a Comment