மழை இல்லாதவிடத்து இம்மாத இறுதிக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தின் டெங்குபரவுதலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரமுடியும் எனஎதிர் பார்க்கின்றோம் அனைவரின் ஒத்துழைப்பு தேவை என மட்டக்களப்பு மாவட்ட தொற்று நோயியல் கட்டுப்பட்டு அதிகாரி வைத்தியர் எஸ்.தர்சினி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட ஆரையம்பதி, கிரான்குளம் ஆகிய கிராமங்களில் சோதனை நடவடிக்கை ஒன்று ஞாயிற்றுக் கிழமை (23) முன்னெடுக்கப்பட்டது. இச் சோதனை நடவடிக்கையில் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.பவித்திரா, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன், மண்முனைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி.எல்.பிரசாந்தன், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.வீ.வெதகெதர, பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்கள், கழகங்கள்.சங்களை சார்ந்த உறுப்பினர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர் பத்து அணிகளாக பிரிந்து குறித்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து மாதங்களாக டெங்கு நுளம்பு பரவுதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக செற்பட்டு வருகின்றோம். இதன்போது ஏறாவூர், காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் கூடுதலான டெங்கு நுளம்பு பரவதல் காணப்பட்டிருந்தது அதனை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம். தற்போது ஆரையம்பதி, ஓட்டமாவடி, கோரளைப்பற்று ஆகிய பிரதேசங்களுக்கு எங்களது முழுக்கவனத்தையும் திசை திருப்பியுள்ளோம். ஆனால் இதனை சுகாதார திணைக்களம் மாத்திரம் மேற்கொள்ள முடியாது அனைவரும் ஒன்றிணைந்தால்தான் இதனை மேற் கொள்ள முடியும்.
அவ்வாறு எமக்கு ஒத்துழைப்பு வழங்கினால் எதிர்வரும் மார்ச்மாதம் முதலாம் வாரத்திற்குள் எமது மாவட்டத்தில் டெங்கு பரவுதலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரமுடியும் என தெரிவித்தார்.
இதே போன்று ஒவ்வொரு கிராமத்தை சார்ந்த சங்கங்கள் அமைப்புக்கள் இதற்காக ஒரு நாள் ஒதுக்கி தங்களது ஒத்துழைப்பை வழங்கினால் எமது மாவட்டத்தில் டெங்கு நுழப்பினால் ஏற்பட்டுவரும் உயிர் இழப்புளை தடுத்து நிறுத்த முடியும் இதற்கு அனைவரும் மனமுவந்து முன்வரவேண்டும் என கேட்டுக் கொள்வதாக கொண்டுவரமுடியும் என வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் இதன் போது கருத்து தெரிவிக்கையில் வேண்டுகோள் விடுத்தார்..
0 Comments:
Post a Comment