27 Apr 2017

தமிழர்கள், முஸ்லீங்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் - அமீரலி

SHARE
நாங்கள் எல்லோரும் இந்த பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் தமிழர்கள், முஸ்லீங்கள் என்று கடந்த காலங்களில் சிலசில குழுக்களினால் பிரித்தாளப்பட்டவர்கள். இனியும் அவற்றையெல்லாம் வைத்து அரசியல் செய்ய முடியாது, அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரவித்தார்
    

மட்டக்களப்பு ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட பாடசாலைகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட கிறிக்கேற்சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வு வித்தியாலய அதிபர் தலமையில் நடைபெற்றது இந் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
    
எமது பாடசாலை நூற்றாண்டு விழாவினை கொண்டாடுகின்றது என்ற செய்தியினை சொல்வதற்காகவும் எமது மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்றிணைத்து ஒரு இன நல்லிணக்கத்தையும், ஒரு சுமூகமான சுழலினை எதிர்காலத்தில்  ஏற்படுத்தும் வேண்டும் என்ற கருப்பொருளின் ஒரு கட்டமாகவே இவ் இக் கிறிக்கேற் சுற்றுப்போட்டி நடாத்தப்பட்டது. இந்த போட்டிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்பாடசாலைகள், முஸ்லீம் பாடசாலைகள் என்ற பேதமின்றி அதற்கு அப்பால் 18 பாடசாலைகள் பங்கு பற்றியிருந்தன இதற்காக நான் ஓட்டமாவடி மத்திய கல்லூரி நிருவாகத்தினரை பாராட்டுகின்றேன். இதனை எப்பாடசாலையும் வெற்றி விழாவாக கொள்ளத்தேவையில்லை.

மற்றுமொரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் ஒன்றிணைத்து இன மதபேதமின்றி அனைவருக்கும் சம அந்தஸ்தை வழங்கி கௌரவிக்கின்ற நிகழ்வையும் இந்நூற்றாண்டு விழாவிலே மேற் கொள்ள இருக்கின்றர். இச் செயற்பாடுகள் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகின்ற தேசிய பாடசாலைகள் நிகழ்வுகளை எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாகும்.

இவ்வாறு உறவுகளை வலுச்சேர்க்கும் முகமாக நடாத்தப்பட்ட இக் கிறிக்கேற் சுற்றுப்போட்டி தனது நோக்கத்தனை அடைந்துள்ளது எனலாம.; இப்போட்டியிலே மூன்றாம் இடத்தினைப் பெற்ற பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்டபட்ட பழுகாமம் கண்மணி மகா வித்தியாலய அதிபர் சு.உதயகுமார் அவர்களும் இந்த இறுதிநிகழ்வில் கலந்து கொண்டு மனங்கோணமல் உட்கார்ந்து பார்வையிட்டமை அதற்கு திறமையான சான்றாக அமைக்கின்றது. இதன் மூலம் இப்பாடசாலைச் சமூகம் எதிர்பார்த்த நல்லிணக்கம் ஏற்பட்டிருகின்றது  என்பதனை நாம் அனைவரும் புரிந்து கொள்பார்கள்ள வேண்ட்டும்
     

நாங்கள் எலலோரும் இந்த பிரதேசத்தினைச் சேர்ந்தவரகள் மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் தமிழர்கள், முஸ்லீங்கள் என்று கடந்த காலங்களில் சிலசில குழுக்களினால் பிரித்தாளப்பட்டவர்கள். இனியும் அவற்றையெல்லாம் வைத்து அரசியல் செய்ய முடியாது, அல்லது அத்தகைய குரோதங்களை வழர்த்து நாங்கள் வெண்டு கொள்ளவும் முடியாது. தோர்க்கப் போவது நாங்கள் தான் எனவே எதிர்காலத்தில் ஒன்றுமைக்காய் நாங்கள் ஒன்றிணைந்து பயணிக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார்




SHARE

Author: verified_user

0 Comments: