மட்டக்களப்பு – வாகரைப் பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பணியகத்துக்கான தனியான அலுவலகம் திங்கட்கிழமை 24.04.2017 திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராச்சி மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்திட்சகர் சமன் யட்டவர ஆகியோருட்பட இன்னும்பல பொலிஸ் பொலிஸ் அதிகாரிகளால் இப்பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் யுனிசெப் மற்றும் சர்வோதயம் ஆகிய நிறுவனங்களின் அமுலாக்கத்துடன் சுமார் 2 மில்லியன் ரூபாய் செலவில் இந்த அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் பெண்கள் சிறுவர்கள் சம்பந்தமான முறைப்பாட்டுக்கு வரும் வாகரைப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சிறுவர்களும் பெண்களும் சிறுவர்கள் பெண்களுக்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள இந்த பணியகத்தில் தமது முறைப்பாடுகளைப் பதிந்து கொள்ள முடியும் என பொலிஸ் பொறுப்பதிகாரி ஜி.வை.ஏ.எஸ். பியதாஸ தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment