15 Apr 2017

கல்முனை அஸ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலை அணி சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டது.

SHARE
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

திணைக்களங்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டியில் கல்முனை அஸ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலை அணி சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டது.
மருதமுனை “மாஸ்” சமூக சேவைகள் அமைப்பு ஏற்பாடு செய்த அரச திணைக்களங்ள், தனியாா் நிறுவனங்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு அண்மையில் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 
அணிக்கு 06 பேர் கொண்ட 05 ஓவர் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியாக இது நடைபெற்றது. கல்முனை பிராந்தியத்திலுள்ள பரபலமான 18 நிறுவனங்களின் கிரிக்கட் அணிகள் இந்த சுற்றுப் பொட்டியில் கலந்து கொண்டன.
இறுதிப் போட்டிக்கு கல்முனை அஸ்ரப் வைத்தியசாலை அணியும் கல்முனை ஹற்றன் நெசனல் வங்கி  அணியும் தெரிவாகியிருந்தன. இதில் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலை அணி சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டது. 
கல்முனை ஹற்றன் நெசனல் வங்கி  அணியினர் 05 ஓவர் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 40 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டனர். 
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை அஸ்ரப் வைத்தியசாலை அணி 4.2 ஓவரில் இரண்டு விக்கட்டுக்களை இழந்து  41ஓட்டங்களை பெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
பிரதம அதிதியாக சரோ பாம் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப் எம்.எச்.எம்.தாஜூதீன் கலந்து கொண்டார்.  கௌரவ அதிதிகளாக எம்.எல்.கே.எம். றம்ஸின், ஏ.எச்.எம்.தஸ்னீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். கல்முனை அஸ்ரப் வைத்தியசாலை அணியின் போட்டியை பார்வையிட வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் வருகைதந்ததுடன்  பிரதம அதிதியிடமிருந்து தனது வைத்தியசாலை அணியுடன் இணைந்து  சம்பியன் கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டாா். அனுசரணையாளர்கள் , பொதுமக்கள் எனப் பலர் இதில் கலந்து கொண்டனர். 











SHARE

Author: verified_user

0 Comments: