15 Apr 2017

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் கௌரவிப்பு நிகழ்வும்

SHARE
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் இணையத்தள அங்குரார்ப்பன நிகழ்வும் அண்மையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் போரத்தின் தலைவர் அல்-ஹாஜ் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ.வணிகசிங்க பிரதம அதிதியாகவும், விசேட அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்  எம்.ரீ.எம்.நிசாம், கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர்  ஐ.எம்.ஹனீபா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனா்

ஊடயகவியலாளர்களின் நலன்களுக்கான முன்னின்று செயற்படுபவருமான முன்னாள் பிரதேச செயலாளரும், சட்ட, ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.சலீம், ஊடகத்துறையில் கடந்த 60 வருடத்திற்கு மேலாக பணியாற்றிவரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.பீ.சிவப்பிரகாசம், விளையாட்டுத்துறை மற்றும் ஊடகத்துறையில் கடந்த 30 வருடத்திற்கு மேலாக கடமையாற்றி வரும் ஓய்வுபெற்ற அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் உடற்கல்வி விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டாா்கள்.

போரத்தின் வருடப் பூர்த்தியினை முன்னிட்டு விசேட நினைவுப் பொருளான குடையினை பிரதம அதிதி விரித்து அங்குரார்ப்பனம் செய்து வைத்தாா். 














SHARE

Author: verified_user

0 Comments: