14 Apr 2017

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை இந்து சம்ளேனம் ஆடைகள் வழங்கி வைப்பு.

SHARE
சித்திரைப் பத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 300 பேருக்கு இலவசமாக ஆடைகள் புதன் கிழமை (12) வழங்கி வைக்கப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேச சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை இந்து சம்ளேனம் இவ்வுதவிளை வழங்கியிருந்தது. இதன்போது போரதீவுப்பற்றுப் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட முதியோர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட மிகவும் கஷ்ற்றத்தின் மத்தியிலுள்ள மக்களுக்கு இவ்வுடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேச சிவில் அமைப்பின் தலைவர் வ.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் ந.அருண்காந், அவ்வமைப்பின் தேசிய ஆலோசகர் சந்திரபோஸ், தேசிய இணைப்பாளர் செ.இராசையா, செயற்குழு உறுப்பினர் பூபாலபிள்ளை போரதீவுப்பற்று சிவில் அமைப்பின் செயலாளர் தெ.சிவபாதம், உள்ளிட்ட உறுப்பினர்கள், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
























SHARE

Author: verified_user

0 Comments: