3 Mar 2017

ஏறாவூரில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

SHARE
கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஏறாவூரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சுமார் 110 மில்லியன் ரூபாய் செலவிலமைந்த பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் அவை நிறைவு பெற்ற நிலையில் வெள்ளிக்கிழமை (03.03.2017) அவற்றை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் வைபவங்கள் இடம்பெறவிருப்பதாக
முதலமைச்சர் செயலகம் அறிவித்துள்ளது.

ஏறாவூர் வாவிக்கரை செய்னுலாப்தீன் ஆலிம் பொழுது போக்குப் பூங்கா, மிச்நகர் ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலை புதிய வார்ட் தொகுதி, ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேற்றுப் பிரிவு நவீன வைத்திய கட்டிடத் தொகுதி, புன்னைக்குடா வீதி, மீராகேணி மற்றும் ஐயன்கேணி வீதிகள் ஆகியவை பயன்பாட்டுக்காக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

அதேவேளை மீனவர்களுக்கான வாழ்வாதார உதவியாக 10 வாவி மீன்பிடித் தோணிகளும், 61 வலைகளும் 27 மீனவக் குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வுகளில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்கின்றனர்.

இதேவேளை, எதிர்வரும் ஞாயிறன்று (05.03.2017) காத்தான்குடியில், மீனவர் வீதி, கடலொழுங்கை வீதி, காங்கேயனோடை பிரதான வீதி என்பனவும் கிழக்கு மாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளன. இந்நிகழ்வுகளில் முதலமைச்சருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உட்பட உள்ளுராட்சி நிருவாக அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: