
கல்லடி, பேச்சியம்மன் ஆலயத்தில் பூசகராக பணியாற்றி வந்த ஆறுமுகன் வடிவேல் (வயது 70) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற வேனொன்று, இந்த வயோதிபரை நபரை மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
வீதியில் விழுந்த அவர் ஸ்தலத்திலேயே மரணமாகியுள்ளார்.
சடலம் உடற் கூற்றுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எடுத்துச் செல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு வயோதிபரை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற வாகனத்தையும் செலுத்திச் சென்ற சாரதியையும் கண்டு பிடிப்பதில் உதவுமாறு பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment