(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கிண்ணியா பிரதேசத்தில் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு மற்றும் சிரமதான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மட் கனி தலைமையில் (24.03.2017) கிண்ணியா பிரதேசத்திற்கு சென்றிருந்தனர்.
கல்முனையில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட டெங்கு நோயை குறுகிய காலத்திற்குள் கட்டுப்படுத்தி கல்முனை சுகாதார வைத்தய அலுவலகம் பொதுமக்களது பாராட்டை பெற்றிருந்தன. இதற்கு பிரதேச செயலகம், சுகாதாரதிணைக்கள உத்தியோகத்தர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
தற்போது கிண்ணியாவில் டெங்கு நோயினால் சுமார் 12பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்து ஐநூறு (1500)க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் டெங்கு நோயை கட்டுப்படுத்த கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.றயீஸ் தலைமையிலான பொதுச்சுகாதர பரிசேதகர் குழுவினர் முழு நேரமாக இங்கு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களது வழிகாட்டலின் கீழ் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வீடு வீடாக சென்று டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கமளித்ததுடன் கிணறுகளையும் நீர் தேங்கிநிற்கும் இடங்கயையும் துப்பரவு செய்தனர்.

0 Comments:
Post a Comment