பட்டிருப்பு கல்வி வலயத்தில் ஏழு பாடசாலைகளில் 9ஏ சித்தி பெறப்படுள்ளதுடன். முற்றுமுழுதாக அதிகஷ்ர பாடசாலைகளை கொண்ட போரதீவுக் கோட்டத்தின் பெறுபேறுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்வி பணிப்பளார் திருமதி.ந.புள்ளநாயகம் தெரிவித்தார். . வெளியான க.பொ.த.சாதாரண தர பரீட்சை முடிவுகள் தொடரட்பாக கேட்ட போதே வலலயக்கல்வி பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இம்முறை வெளியான பெறுபேற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கோட்டடைகல்லாறு மகாவித்தியாலயத்தில் 5 மாணவரும், பெரியகல்லாறு உதயபுரம் வித்தியாலயத்தில் 2 மாணவரும், துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் 3 மாணவரும், ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலயத்தில் 2 மாணவர்களும், குறுமன்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் ஒரு மாணவனும், மண்டூர்.ஆர்.கே.எம் வித்தியாலயத்தில் ஒரு மாணவரும், பட்டிருப்பு மத்தியமகாவித்தியாலய தேசியபாடசாலையில் ஒரு மாணவரும் 9ஏ சித்தியை பெற்றுள்ளனர். அனேகமான பாடசாலைகளில் 8ஏ சித்திகள் பெறப்பபட்டுள்ளதுடன். சில பாடசாலைகளில் உயர்தரம் கற்பதற்கான நூறு வீத தகுதியை மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்காக அற்பணித்து செயற்பட்ட ஆசிரியர்கள், அதிபர்கள், அதிகாரிகள் அனைவரையும் பாராட்டுகின்றேன்.
அதேவேளை போரதீவுக் கோட்ட பாடசாலைகளின் மொத்த சித்தி வீதம் 75 ஆக உயர்வடைந்துள்ளது. இதற்காக அற்பணிப்பாக செயற்பட்ட அனைத்து அதிபர்கள், ஆசிரியர்களை பாராட்டுவதுடன் அனைத்து பாடசாலைகளுக்கு பலத்த சிரமத்தின் மத்தியில் ஆசிரியர்களை நியமித்து தந்த வலயக்கல்வி பணி;பபாளருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்தக் கொள்வதாக கோட்ட கல்வி பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் இதன் போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment