27 Mar 2017

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சேவை பாராட்டத்தக்கது - அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி வணிகசிங்க

SHARE
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கடந்த ஆண்டு தேசிய உற்பத்தித்திறன் அபிவிருத்திக்கான விருதுக்கு போட்டியிட்டு தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பெற்றுக்கொண்டது. அம்பாரை மாவட்டத்தின் கரையோரத்தில் அரச நிறுவனமொன்று இந்த விருதை பெற்றுக் கொள்வது இதுவே முதல்தடவையாகும். விருதை பெற்றுக்கொண்டமைக்காக
 வைத்தியசாலையின் அனைத்து உத்தியோகத்தர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (23.03.2017) வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் வைத்தியசாலையில் நடைபெற்றது.

இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தாா். மேலும் இங்கு உரையாற்றுகையில்,
ஒரு பிரதேசத்தில் வைத்தியசாலையின் பணி பெறுமதியானதாகும். கல்முனை ஆதார வைத்தியசாலையின் சேவையினை பாராட்டுகின்றேன். இந்த விருதை பெறுவது இலகுவான விடயமல்ல. அயராத சேவையும் நிருவாக ஒற்றுமையும் இதற்கு பின்னால் நிச்சயம் இருந்திருக்கும் முரளீஸ்வரன் ஒரு இளம் வைத்திய அத்தியட்சகர் அவருடைய சேவை பாராட்டத்தக்கதாகும். அத்துடன் இங்கு கடமையாற்றும் அனைவரையும் பாராட்டுகிறேன். அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.
கௌரவ அதிதியாக பிரதேச செயலாளர் கே.லவநாதன் கலந்து கொண்டாா். நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர் தொடக்கம் சிற்றுழியர் வரைக்குமான அனைவரும் சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டாா்கள்.









SHARE

Author: verified_user

0 Comments: