22 Mar 2017

நாவிதன்வெளிபிரதேசசெயலகத்துக்கூட்பட்டபல்வேறு இடங்களில்தொடர்ந்து இடம்பெற்றுவரும் காட்டுயானைகளின் அட்டகாசம்

SHARE
(துறையூர் தாஸன்)

அம்பாறைமாவட்டநாவிதன்வெளிபிரதேசசெயலகத்துக்கூட்பட்டமத்தியமுகாம்,இலுப்பைக்குளம் போன்ற இடங்களில்தொடர்ந்து இடம்பெற்றுவரும் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துவருவதாகபிரதேசவாழ் மக்கள் கவலைதெரிவிக்கின்றனர். 

மிகஅண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் காட்டுயானைகளின் தாக்குதல்களும் அட்டகாசங்களும் அதிகரித்துள்ளதுடன் தினமும் தமதுகிராமங்களுக்குள் புகுந்துவீடுகள்,சேனைப்பயிர் செய்கைகள்,தோட்டங்கள்,நெற்செய்கைகள் மற்றும் பயன் தருமரங்களைஅழித்துவருவதுடன் தமதுஅன்றாட ஜீவனோபாயத்தில் பாரிய இடர்ப்பாடுகளையும்ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இலுப்பைக்குளம் பிரதேசத்தில் நேற்றுஅதிகாலை 2.00 மணிநேரவேளையில்,கனகரெத்தினம் என்பவரதுவளவுக்குள் புகுந்துபடடறையில் வைக்கப்பட்டிருந்த மூன்றுநெல் மூடைகளையும் அருகிலுள்ளமரவெள்ளிதோட்டத்தினையும் மிகுந்தசேதத்துக்குஉட்ப்படுத்தியுள்ளதாகவீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்
நன்குபழக்கப்பட்டநான்குயானைகளே இவ்வாறுதமதுபகுதிக்குள் உட்புகுந்துதங்களதுவாழ்வாதாரத்தைஅழிப்பதாகபிரதேசவாழ் மக்கள் கவலைதெரிவிக்கின்றனர். 

கடந்தகாலபகுதிக்குள் 15 பேர்காட்டுயானைகளின் தாக்குதலுக்கியுள்ளதுடன் 20 மேற்பட்டவீடுகளும்சேதமாக்கப்பட்டுள்ளனஎனதெரியவருகிறது.
தங்களையும் தங்களதுஉடமைமற்றும் வளங்களையும்காட்டுயானைகளில் தொல்லைகளிலிருந்து,விடுவித்துதருமாறுமக்கள் பிரதிநிதிகளிடமும்,அரசஅதிபரிடமும் பிரதேசவாழ்மக்கள்கோரிக்கைவிடுக்கின்றனர்




SHARE

Author: verified_user

0 Comments: