மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவு கிண்ணையடிக் கிராமத்திலுள்ள 3 கோவில்களில் புதன்கிழமை (15.03.2017) அதிகாலை திருட்டு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாணிக்கப் பிள்ளையார், மஹா விஷ்ணு, நாக தம்பிரான் ஆகிய ஆலயங்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அவற்றிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக மேற்படி ஆலயங்களின் பரிபாலன சபையினர் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
மாணிக்கப் பிள்ளையார் மற்றும் மஹா விஷ்ணு ஆகிய ஆலயங்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் பணம் திருடப்பட்ட நிலையில், அந்த உண்டியல்கள் வெளியில் வீசப்பட்டுக் காணப்பட்டதாகவும் மேற்படி ஆலயங்களின் அறங்காவலர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.



0 Comments:
Post a Comment