மட்டக்களப்பு வலயமட்ட விளையாட்டுப்போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரி ஐந்து முதலிடங்களை பெற்று சாம்பியன்களை தனதாக்கிக்கொண்டுள்ளது.
எட்டு இரண்டாம் இடங்களையும் தட்டிக்கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியர் கே.ரவீந்திரன் தெரிவித்தார். வலயமட்ட விளையாட்டுப் போட்டியானது சிவானந்தா விளையாட்டு மைதானம்,வெபர்விளையாட்டு மைதானம்,பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானங்களில் உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் வீ.லவக்குமார் அவர்களின் ஒழுங்கமைப்பின் பேரிலும்,ஆலோசனை வழிகாட்டல்களிலும் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில்
நடைபெற்றது.கிரிகெட்,எறிபந்து,உதைபந்து,பூப்பந்து ஆகிய விளையாட்டுக்களில் ஐந்து முதலிடங்களை பெற்று சாம்பியண்களை சுவீகரித்து மாகாண மட்ட விளையாட்டுப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.இது பாடசாலைக்கும்,பாடசாலை சமூகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.இதே போன்று எறிபந்து,எல்லே,கரப்பந்து, மேசைப்பந்து,கரம்,சதுரங்கம், ஆகிய விளையாட்டுக்களில் எட்டு இரண்டாம் இடங்களையும் தட்டிக்கொண்டது.இப்போட்டிகளில் 16 வயது தொடக்கம் 20வயது வரையான மாணவர்களே விளையாட்டுக்களில் ஈடுபட்டார்கள்.இவர்களுக்கு சான்றீதழ்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment