மட்டக்களப்பு குருக்கள்மடம் சிவநெறிமன்ற அறநெறிப் பாடசாலை, மற்றும் ஸ்ரீ முருகன் அறநெறிப் பாடசாலைமாணவர்களுக்கு இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இலவசசீருடைவழங்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவநெறிமன்றத் தலைவர் சாமஸ்ரீ தேசகீர்த்தி, தேசாபிமானிவல்லிபுரம் குணசேகரம் அகில இலங்கைசமாதானநீதிவான் தலைமையில் மட்.பட்.குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன்; மட்டக்களப்பு மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம் மண்முனை தென் எருவில் பற்றுபிரதேச இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கு.பரமசிவம், மட்.பட்.குருக்கள்மடம் கலைவாணி ம.வி அதிபர் ஆ.சிவசம்பு, ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயபரிபாலனசபைத் தலைவர் வீ.மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கிவைத்தனர்.
இதேவேளை நாட்டிலுள்ள சிறார்களுக்குதற்காலத்தில் அறநெறிக் கல்வியின் முக்கியத்துவம் கருதி ஞாயிறுதினங்களில் காலைவேளை தரம் 01 தொடக்கம் 11 வரை தனியார் கல்வி நிலயங்களில் நடாத்தப்படும் வகுப்புக்கள் மற்றும் பிரத்தியேகமான முறையில் நடாத்தப்படும் வகுப்புக்கள் போன்றவற்றை நடாத்தக் கூடாதெனபல அமைப்புக்கள் மற்றும் அரசாங்கம் மூலமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தும் கூட தொடர்ந்தும் தற்போதுவரை இவ் வகுப்புக்கள் நடாத்தப்பட்டுவருவதால் பெற்றோர்களாகிய எங்களுக்கு பிள்ளைகளை அறநெறிப் பாடசாலைகளுக்கு அனுப்புவதில் சிரமங்களை எதிர் நோக்கவேண்டி உள்ளதெனவும், அறநெறிக் கல்வியின் முக்கியத்துவம் கருதி பாராளுமன்றஉறுப்பினராகவும் மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவராகவும் ஆன்மீகத் தலைவராகவும் இருக்கும் நீங்கள் முன்னின்று இவ் வகுப்புகள் நடாத்துவதனைதடைசெய்து நம்சிறார்கள் அனைவரும் அறநெறிக் கல்வியை கற்க வழிசமைத்துத்தருமாறு பெற்றோர்கள் இதன்போது வேண்டிக் கொண்டனர்.
இவ் விடயத்தினை அறநெறிப்பாடசாலைகள், ஆலயங்களின் நிருவாகத்தினர் மற்றும் சமய அமைப்புக்களின் நிருவாகத்தினர் உறுதிப்படுத்தினர். இவ் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட பாராளுமன்றஉறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இவ்விடயமானது தொடர்ந்தும் பாரியபிரச்சனையாகவே காணப்படுகின்றது எனவும் அனைவரும் இதைஉணர்ந்து செயற்பட்டால் இப் பிரச்சினைகள் தோன்றமாட்டாது எனவும் கூறியதோடு விரைவில் இப்பகுதிபிரதேச செயலாளருடன் இணைந்து ஞாயிற்றுக் கிழமைகாலை 08 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை சகலவகுப்புக்கள் நடைபெறுவதனையும் தடை செய்துதர நடவடிக்கைஎடுப்பதாக உறுதியளித்ததோடு,
அறநெறிசம்பந்தமான கருத்துக்கள், அறநெறி மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவிழுமியங்கள், ஒழுக்கநெறிகள் சம்பந்தமாகவும் பலகதைகளுடன் எடுத்துக்கூறியதுடன் இக்கதைகளைகேட்டுக் கொண்டிருந்த அறநெறிமாணவர்களிடம் வினாக்களை வினவிசரியானவிடையளித்த மாணவர்களுக்கு உடனடிபணப் பரிசில்களும் வழங்கிமாணவர்களை ஊடக்கப்படுமத்தினார்.









0 Comments:
Post a Comment