29 Mar 2017

வின்சன்ட் உயர்தரப் பெண்கள் பாடசாலையில் 95 வீதமானவர்கள் உயர்தரம் படிப்பதற்கு தகுதி

SHARE
(க.விஜி) 

வெளியாகியுள்ள .பொ.சா/தரனப் பரீட்சையில்(2016 ஆம் ஆண்டுக்கான) பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு வலயத்தில் உள்ள வின்சன்ட் உயர்தரப் பெண்கள் பாடசாலையில் 95 வீதமானவர்கள் உயர்தரம் படிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கம் தெரிவித்தார்.இதன்படி தோற்றிய மாணவர்களில் 29 பேர் 9(9A) சித்திகளையும்,20 பேர் 8 பீ(8Ab) களையும்,15 பேர் 7 2பீ(7Ab) களையும் பெற்றுள்ளார்கள்.இவை எமக்கு கிடைக்கப்பெற்ற முதன்மையான பெறுபேறாகும்.இப்பரீட்சைக்கு எமது பாடசாலையிலிருந்து  157 மாணவிகள்  .பொ.சா/தா பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள்.
இப்பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கும்,அதற்கு வழிகாட்டியாக திகழ்ந்த ஆசிரி பெருந்தகைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும்,பாராட்டுக்களையும்  தெரிவித்துக்கொள்கின்றேன்.இதேவேளை இவ்வலயத்தில் உள்ள புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் .பொ.சா/தாரனப்பரீட்சை முடிவுகளின்படி 11பேர் 9ஏயும்(9A),12 மாணவர்கள் 8 பீ, 12 பேர் 7 ஏபீசீ,10பேர் 6 2பீ சீ களையும் பெற்றுள்ளதாக புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி அருள்மரியா தெரிவித்தார். இப்பரீட்சைக்கு 158 மாணவர்கள் தோற்றியுள்ளார்கள்.இப்பாடசாலையின் நல்ல பெறுபேற்றை பெற்றுக்கொண்ட மாணவச்செல்வங்களுக்கும்,அவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாகவும்,அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
SHARE

Author: verified_user

0 Comments: