(க.விஜயரெத்தினம்)
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் எருமை மாட்டுடன் பலமாக மோதி உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை (25.3.2017) மாலை 8.00 மணியளவில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சிசிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வெல்லாவெளி -பக்கியெல்லை பிரதானவீதியில் டாணியல் கடைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வெல்லாவெளி பிரதேசத்திற்கு வேகமாக சென்றுள்ளார்கள். வேகமாக பயணிக்கையில் வயலுக்குள் மேய்ந்துகொண்டிருந்த எருமை மாடு மோட்டார் சைக்கிளின் அதிகமான இரைச்சல் சத்தத்திற்கு விரண்டுபோய் ஓடியது.மோட்டார்சைக்கிளைச் செலுத்தியவர்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எருமை மாட்டுடன் மோதுண்டும்,பனைமரத்துடனும் மோதுண்டுள்ளார்கள்.
படுகாயமடைந்த இருவரையும் பொதுமக்களின் உதவியுடன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.இவ்விபத்தில் பாலையடி வட்டையைச் சேர்ந்த சபாரெத்தினம் -பிரபு (வயது 30)சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இவ்விபத்தில் உயிரிழந்தவர் மத்திய கிழக்கு நாடான கட்டார் நாட்டில் இருந்து பத்துநாட்களுக்கு முன்பே தாயகம் திரும்பியுள்ளார்.இவ்வாறான நிலையில் தான் இவர் எருமை மாட்டுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். திருமணம் செய்ய வேண்டும் நோக்கிலேயே தாயகம் திரும்பியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
காயப்பட்ட மற்றைய நபர் சிசிச்சை பெற்று வருகின்றார்.இந்த விபத்து சம்பவத்தில் கன்று வளர்த்த நான்கு வயதான எருமை மாடானது ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளது.மேலும் அடித்த இடத்திலே எருமைமாடு ஆடாமல் அசையாமல் உயிரிழந்துள்ளது.அஃது போன்று விபத்தில் உயிரிழந்தவருக்கு எதுவித காயம் ஏற்படாமல் நெஞ்சு பலமாக அடிக்கப்பட்டு மூச்சுத்திணறல் மூலம் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து சம்பந்தமாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெல்லாவெளி பொலீஸ் பொறுப்பதிகாரி சம்பந் தெரிவித்தார்.சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மரண விசாரணை இடம்பெற்ற பின்னர் உறவினர்களிடம் சடலம் இன்று பிற்பகல் நான்கு மணியளவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.நாளை திங்கட்கிழமை நெல்லிக்காடு பொதுமயாணத்தில் 3.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.பள்சர் ரக மோட்டார் சைக்கிள் விபத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.




0 Comments:
Post a Comment