மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரம்பரிய பண்பாட்டியல் வழக்காறுபேணும் குருக்கள்மடம் கிரபமத்தில் தெய்வீகம் பெற்றுத் திகழும் திருத்தலமான ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காமசுவாமி ஆலயத்தில் கடந்த 24 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் மஹாசிவராத்திரிப் பெருவிழா ஆரம்பமாகியது. இதில் சிவலிங்கப் பெருமானுக்கு நான்கு ஜாம அபிஷேகங்களும் விசேட பூசைவழிபாடுகளும் ஆலயப் பிரதம
குருசிவஸ்ரீ வே.கு.நாகராசாக்குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.இப்பூசைகாலங்களில் சிவநெறிமன்றமானது சக்திநெறிமன்றத்தினர் சிவநெறிமன்ற அறநெறிப் பாடசாலைஆசிரியர்கள், மாணவர்கள் பக்த அடியார்கள் அனைவரையும் இணைத்து கூட்டுப்பிரார்த்தனை, பஜனை நிகழ்வுகளை நடாத்தியதுடன், சிவநெறிமன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் சமயப் பெரியார்களின் விசேடசமய சொற்பொழிவுகளும் சிவநெறிமன்றத்தின் தலைவர் சாமஸ்ரீ தேசகீர்த்தி, தேசாபிமானி வல்லிபுரம் குணசேகரம் சமாதானநீதிவான் தலைமையில் வெகுசிறப்பாக இடம்பெற்றன.





















0 Comments:
Post a Comment