4 Mar 2017

கிழக்கு மாகாணம் 70 சதவீதம் விவசாயத்தை நம்பியிருப்பதால் அதனை மேலும் வளப்படுத்த வேண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்

SHARE
கிழக்கு மாகாணம் 70 சதவீதம் விவசாயத்தை நம்பியிருப்பதால் எல்லோருமாகச் சேர்ந்து விவசாயத்துறையை  மேலும் வளப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

பாடசாலைத் தோட்டம் அமைத்தலுக்கான உபகரணங்கள், உள்ளீடுகள் விநியோகம் சனிக்கிழமை 04.03.2017 ஏறாவூர் றஹ்மானியா வித்தியாலயத்தில் இடம்பெற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்@ பொதுவில் எல்லோருக்குமான விழிப்பூட்டலுக்காக நான் மாகாண விவசாய விவசாய கண்காட்சியை நடத்தினே;. அது இப்பொழுதும் தொடர்கின்றது. தற்போதைய மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம் அதனை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார்.

விவசாயிகள் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் விவசாயத்திலே ஆர்வமுடையோரும் இதில் நன்மையடைகிறார்கள்.

கிழக்கு மாகாணம் அதன் வாழ்வாதாரத்துக்காகவும் பொருளாதாரத்துக்காகவும் 70 சதவீதம் விவசாயத்தை நம்பியிருக்கின்றது.

பெரும்போக சிறுபோக நெற்செய்கை, சேனைப் பயிர்ச் செய்கை, கால் நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட ஏனைய விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட வாழ்வாதார பொருளீட்டல்களில் கிழக்கு மாகாண மக்கள் ஈடுபடுகின்றார்கள்.

எனவே, தற்போதிருக்கின்ற விவசாயத்தை மேலும் வளம்படுத்த வேண்டும். அதற்காக கிழக்கு மாகாண அமைச்சரவையிலே நாங்கள் விவசாயத்துக்கு முன்னுரிமையளிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இப்பொழுது இந்த அவசர இயந்திர வாழ்க்கையில் நாம் சுகவாழ்வுச் சூழலை நாசம் செய்து விட்டு உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர் என ஒட்டுமொத்த இயற்கையையும் நஞ்சாகி மாற்றி அதற்குள் வாழப் பழகி நோயாளியாகிக் கொண்டிருக்கின்றோம்.

மனிதர்களின் இயற்கைக்கு விரோதமான செயற்பாடு காரணமாக காலநிலை மாற்றமும் அதனால் பாதிப்புக்களும் ஏற்படுகின்றன.

இப்படியே இந்த உலகை வைத்திருப்போமாகில் எம்மை வாழ வைக்கின்ற இயற்கைச் சூழலும் அதன் சம நிலையும் பாதிக்கப்பட்டு நாம் நமது கரங்களாலேயே அழிவுகளைத் தேடிக் கொண்டவராவோம்.

அதனாலேதான் எதிர்கால சந்ததியினரான மாணவ சமூகத்துக்கு நாம் இயற்கை விவசாயத்தையும் நஞ்சுச் சூழலற்ற இயற்கையைப் பற்றியும் விழிப்பூட்டி வருகின்றோம்.

கிழக்கு மாகாண விவசா அமைச்சு, விவசாய மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் இயற்கை சூழலியல் ஆர்வலர்களும் நிறுவனங்களும் என எல்லோருமாகச் சேர்ந்து இந்த காரியத்தில் இறங்கியுள்ளோம்.
ஆகையினால் இந்தப் பணிக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர் என எல்லோரும் விழிப்படைந்து செயலில் இறங்க வேண்டும்.” என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவு, விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் உட்பட பாடசாலை அதிபர்கள், ஆசியர்கள் மாணவர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஏறாவூர் றஹ்மானியா வித்தியாலயம் மற்றும் ஏறாவூர் அமீரலி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பாடசாலைத் தோட்ட உபகரணங்களும் உள்ளீடுகளும் வழங்கப்பட்பட்டதோடு விவசாயிகள் இருவருக்கும் வீட்டுத் தோட்டத்துக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.






SHARE

Author: verified_user

0 Comments: