(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை ஸம்ஸ் மத்தியகல்லூரி “கிரிக்கட் பாடசாலை”திட்டத்தின் கீழ் சகலவசதிகளும் கொண்ட பாடசாலையாக தரமுயர்த்தப்படும் என விளையாட்டுத்துறை
பிரதிஅமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
பிரதிஅமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டு விழா சுமார் 10 வருடங்களின் பின்னர் மிகவும் கோலாகலமாக நேற்று மாலை (10.03.2017) நடைபெற்றது. இறுதிநாள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்
தொடர்ந்து இங்கு உரையாற்றிய அமைச்சர்,
1978 ஆண்டு கிழக்கை தாக்கிய சூறாவளி, 2004 ஆம் ஆண்டு எற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக அழிவடைந்த ஸம்ஸ் மத்தியகல்லூரி இன்று பீனிக்ஸ் பறவை போல் தலைநிமிர்ந்து நிற்கிறது. இதற்கு காரணம் இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் காட்டும் அக்கறையாகும்.
இன்று விளைாட்டுத்துறை இனநல்லுறவை ஏற்பாபடுத்தும் மிக முக்கியமான துறையாக காணப்படுகிறது. இதன் மூலம் பிராந்தியத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.
ஸம்ஸ் மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை முழுநிறைவான மைதானமாக விரைவில் எனது அமைச்சின் மூலம் தரமுயர்த்தித் தருவேன். அதேபோன்று “கிரிக்கட் பாடசாலை” திட்டத்தின் கீழ் சகல வசதிகளும் கொண்ட பாடசாலையாக ஸம்ஸ் மத்திய கல்லூரி தரமுயர்த்தப்படும். எனத் தெரிவித்தார்.
ஸம்ஸ், நஜீம், கமர் ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் கமர் இல்லம் 548 புள்ளிகளை பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. ஸம்ஸ் இல்லம் 514 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தினையும் நஜீம் இல்லம் 442 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.
வெற்றிக் கிண்ணங்களை பிரதம அதிதி மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்களான அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்தீன், மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் ஆகியோரும் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல் உட்பட பலரும் கலந்து கொண்டு வழங்கிவைத்தனர்.
















0 Comments:
Post a Comment