(இ.சுதாகரன்)
வெளியாகியுள்ளகல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சம்மாந்துறைகல்விவலயத்திற்குட்பட்ட கஷ்ட பிரதேசபாடசாலையாகியறாணமடு இந்தமகாவித்தியாலயத்தில் இரு மாணவிகள் 9 ஏ தாசித்தியினைப் பெற்றுபிரதேசத்தில் மட்டுமல்லாதுபாடசாலைக்கும் பெருமைசேர்த்துள்ளனர்.
அ.மிராலினிஅ.மிதுசனா இரு மாணவிகளும் ஆசிரியர் அற்புதராஜா அவர்களின் இரட்டைச் பிள்ளைகளாவர்.இவர்களில் ஒருவர் கடந்தவருடம் நடைபெற்றதமிழ் இலக்கணப் போட்டியில் தேசியமட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.
குறித்தபெறுபேறானதுநாவிதன் வெளிக் கோட்டத்தில் ஒரேதடவையில் இப் பாடசாலையில் பெற்றுக் கொண்டபெறுபேறாகும்.இது பிரதேசத்தில் வரலாற்றுச் சான்றாகும்.குறித்தபெறுபேறுதொடர்பாக வலயக்கல்விப் பணிப்பாளர் மட்டுமல்லாது பாடசாலைச் சமூகமும்மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment