1 Mar 2017

மகளிர் உரிமைகளைப் பாதுகாக்குமாறு அரசாங்க அதிபர் தலைமையில் மட்டக்களப்பில் பெண்கள் பாதயாத்திரை

SHARE
பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கான பாத யாத்திரை புதன் கிழமை (01) மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது. மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த பாத யாத்திரை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாhள்ஸ் தலைமையில்
மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஆரம்பமாகி மட்டக்களப்பு டேபா மண்டபம் வரையில் சென்றது.

கடன் பிரச்சினை, வீட்டு வன்முறை, பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் வன்முறைகள் என்பவற்றிற்கெதிராக இப்பாதையாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மாவட்ட மகளிர் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் சந்திரசேகரம் அருணாளினி இதனை ஏற்பாடு செய்திருந்தார்.

அபிவிருத்தித் திட்டங்களினூடாக பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பிரதிபலிப்பதாக இந்த பாதை யாத்திரை இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வுகள் பல வழிகளிலும் வழங்கப்பட்டிருந்தாலும், பெண்கள் சமூகத்தில் அடைய வேண்டிய இலக்கு அதிகம் காணப்படுகின்றது.பெண்களின் முன்னேற்றம் என்பது ஒன்றிணைந்த ஒரு விடயமாகப் பார்க்கப்பட வேண்டும். கடன் பிரச்சினை, வீட்டு வன்முறை, பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் வன்முறைகள் என்பன இன்னமும் இலங்கையில் குறையவில்லை.என பாதயாத்திரையில் சென்றோர் குறிப்பிட்டனர்.










SHARE

Author: verified_user

0 Comments: