மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்ளத்தின் மருந்துக்களஞ்சியசாலைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கள்ளியன்காட்டிலுள்ள தமது களஞ்சியசாலையைப் பயன்படுத்த முடியும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (27)மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிறுநீரகச் சத்திர சிகிச்சைப்பிரிவிற்கான கட்டத்தினை அமைப்பதற்கான 600 மில்லியன் பணம் திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளமை குறித்து விவாதம் எழுந்த போது அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இந்த விடயத்தினை முன்வைத்து கருத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவர்களான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ;.சிறிநேசன் ஆகியோர் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எம்.இப்ரா லெப்பை ஆகியோரிடம் வினவினர்.
இதன் போது கருத்துத் தெரிவித்த சுசுகாதார சேவைகள் மாகாணப்பணிப்பாளர், சுகாதார சேவைகள் பணிமனைக்குச் சொந்தமான கட்டடம் சப்பல் வீதியிலுள்ளதாகவும், இந்தக்கட்டடம் 97களில் இராணுவம் பயன்படுத்த ஆரம்பித்ததாகவும், யுத்தம் நிறைவடைந்த பின்னர் அதனை தம்மிடம் ஒப்படைப்பதாகக் கூறிய போதும் 2008 மாகாண சபைத் தேர்தலின் பின்னர் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
அதனையடுத்து அடுத்த முதலமைச்சரால் கையேற்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டத்தினை எமது மருந்துக் களஞ்சியமாகப்பாவிக்கக் கோரப்பட்டபோதும். அதற்குப்பதிலாக மட்டக்களப்பு மத்திய சந்தைக்கு புதிதாகக்கட்டப்பட்ட கட்டத்தினைப்பயன்படுத்துமாறு முதலமைச்சர் கூறியிருப்பதாகவும் அது பொருத்தமில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் வேறு பொருத்தமான கட்டடம் தெரிவு செய்யவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட போதே அரசாங்க அதிபர் தமது கள்ளியன்காடு களஞ்சியசாலையைத்திருத்திப் பயன்படுத்த முடியும். மாவட்ட வைத்தியசாலைக்கான அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட 600 மில்லியன் ரூபா திரும்பிச் செல்லக்கூடாது என்பதற்காக இதற்கான சிரமத்தினைத் தான் எடுது;துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் இது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தமது மருந்துக் களஞ்சிய சாலைக்கட்டத்தினை அமைக்கும் வரையிலானதே என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
கடந்த ஓரவருடங்களுக்கு மேலாக இந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுநீரக சத்திர சிகிச்சை கட்டம் அமைத்தல் மருந்துக் களஞ்சியசாலைக்கட்டத்தினை மாற்றுதல் தொடர்பான பிரச்சினைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment