(துறையூர் தாஸன்)
பௌர்ணமிகலை இலக்கியத் தொடர் - 25 ஐ சிறப்பிக்கும் வகையில் மட் மாநகரசபையின் அனுசரணையுடன் மகுடம் கலை இலக்கியவட்டம் நடாத்தும் ஞானம் இருநூறாவது இதழின் அறிமுகமும் ஞானரதம் பவளவிழாமலர் அறிமுகநிகழ்வும்மட்டுபொது நூலககேட்போர் கூடத்தில் நாளைமறுதினம்(25) ,மகுடம் கலை இலக்கியவட்டஆலோசகர் செ.யோகராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்புமாநகர சபை ஆணையாளர் வெ.தவராஜா பிரதமஅதிதியாககலந்துகொள்ளவுள்ளார்.
ஞானம் நிர்வாகஆசிரியர் ஞானம் பாலச்சந்திரனால் வெளியீட்டுரையும் கவிஞர் மேராவினால் ஞானம் அறிமுகஉரையும் மற்றும் ஞானரதஅறிமுகஉரைகவிஞர் ச.மணிசேகரனாலும் நிகழ்த்தப்படவுள்ளது.
ஞானம் மற்றும் பவளவிழாமலர் ஞானரத நூற் பிரதிகளைடாக்டர் செல்லையாவாமதேவன் பெறவுள்ளார்என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரவேற்புரையினைமகுடம் கலை இலக்கியவட்டத் தலைவர் மகுடம் மைக்கல் கொலினும் நன்றியுரையினைதி.ஞானசேகரமும் ஆற்றவுள்ளனர்.

0 Comments:
Post a Comment