மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிலுள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சுற்றுமதில் அமைக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு
செய்துள்ளதாக முதலமைச்சர் செயலகம் தெரிவித்துள்ளது.
தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைக் கொண்டு சுமார் 3500 அடி சுற்றுப்பரப்புக்கு சுற்று மதில் அமைக்கப்படவுள்ளது.
இந்த வைத்தியசாலையின் நீண்டநாள் தேவையாக அதன் பாதுகாப்பு, நோயளார்கள், வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் ஆகியோரின் சௌகரியம் கருதி இந்த சுற்றுமதில் அமைக்கும் விடயம் வைத்தியசாலை நிருவாகத்தினாலும் நலன் விரும்பிகளினாலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.
இந்த விடயத்தில் அதிகம் அக்கறை கொண்ட வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களான எஸ்.ஐ.எம். நிப்ராஸ், எச்.எம். கலந்தர், எம்.எச்.எம். இம்ரான் ஆகியோர் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் சுற்று மதிலினை அமைத்துத் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
கல்குடா பிரதேசத்தில் அனேக அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் இந்த வேண்டுகோளை ஏற்று, 10 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது பாராட்டுக்குரியது என வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் எஸ்.ஐ.எம். நிப்ராஸ் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment