13 Feb 2017

ஆரோக்கியத்தின் ஊடாக உலகை வெல்வோம்” செயற்பாட்டு இறுதி நிகழ்வு

SHARE
“ஆரோக்கியத்தின் ஊடாக உலகை வெல்வோம்” எனும் தொனிப் பொருளில் விளையாட்டுத்துறை அமைச்சு செயற்படுத்தும் விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வார இறுதி நிகழ்வு ஏறாவூர் நகரில் வீதி உலா வந்ததுடன் ஏறாவூர்
பொலிஸ் நிலைய முன்னரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை 12.02.2017 முடிவுற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஏ.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் பொலிஸார், இளைஞர் கழக உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

கடந்த ஒரு வாரகாலமாக ஆறு கட்டங்களாக இடம்பெற்ற இந்த விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வார நிகழ்வுகளில் சகல தரங்களிலுமுள்ள அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் தேகாரோக்கியப் பயிற்சியளிக்கப்பட்டதாக விளையாட்டு உத்தியோகத்தரும் பயிற்சியாளருமான எம்.எம்.எம். ஜெலீல் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆறு தினங்களாக இடம்பெற்று வந்த விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வார நிகழ்வுகளில் அலுவலர்கள், கற்பிணித் தாய்மார், சிறுவர்கள், முதியோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வூட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சகல நிகழ்வுகளிலும் தினமும் போஷாக்கு நிறைந்த பாரம்பரிய காலை உணவு இலைகளில் வைத்து  பரிமாறப்படுவது சிறப்பம்சமாகும். 




SHARE

Author: verified_user

0 Comments: