13 Feb 2017

டிஜிற்றல் வைத்தியசாலையாக மாற்றுவதற்கு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தெரிவு.

SHARE
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் எண்ணியல் (டிஜிரல்) வைத்தியசாலை திட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சுகாதார அமைச்சினால் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இலத்திரணியல் அரசாங்கம் எனும் திட்டத்தின் ஊடாக வைத்தியசாலைகளை டிஜிரல் வைத்தியசாலையாக மாற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் 300 வைத்தியாசாலைகள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படவுள்ளது.  முதற்கட்டமாக 45 வைத்தியசாலைகள் தேர்த்தெடுக்கப்பட்ட நிலையில் குறித்த முதற்கட்ட தேர்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை உள்வாங்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய வைத்தியசாலை  அனைத்து நடவடிக்கைகளும் கணணி மயப்படுத்தப்படவுள்ளதுடன்  எதிர்வரும் ஏப்ரல் மாதம்  முதற்கட்டமாக வெளிநேயாளர் பிரிவில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.  வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறவரும் நோயாளர்களுக்;கு தற்போது கடதாசி சிற் வழங்கப்பட்டு வருகின்றது. 

இத் திட்டத்தின் பிரகாகரம் கடதாசி சிற்றிக்கு பதிலாக நோயாளிக்கு அடையாள அட்டடை வழங்கப்படும். இவ் அடையாளட்டை ஒரு தடைவ மாத்திரமே வழங்கப்படும், இவ் அட்டையில் நோயாளியின் சொந்த தகவல், நோய்பற்றிய தகவல், மருந்து, மாத்திரை போன்ற அனைத்து தகவல்களும் உள்ளடக்கப்படும்.
  
இதன் ஊடக நோயாளி ஒருவர் சிரமமின்றி வைத்தியத்தை பெற்றுக் கொள்வதற்கும் மருத்துவ நடவடிக்கைகள் அனைத்தையும் இலகுவாக தங்குதடையின்றி  முன்னெடுப்பதற்கு இத்திட்டம் துணைபுரிய இருப்பதாகவும் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது வைத்தியசாலை தேரர்தெடுக்கப்படடமை சந்தோசம் அளிப்பதாகவும்  இவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: