எனதினிய கிழக்கிலங்கை வாழ் தமிழ்ப் பேசுஞ் சகோதர சகோதரிகளே!
எழுக தமிழானது மட்டக்களப்புக்கு விஜயம் செய்ய இருப்பதை நீங்கள் அறிவீர்கள். தமிழ்ப் பேசும் சகல மக்களையும் “எழுக தமிழ்”நடைபவனியில் பங்குபற்ற அழைக்கின்றேன். எம்மக்கள் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் அண்டையில் இருந்து நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுக் கழகத்திடலுக்கு இம் மாதம் 10ந் காலை திகதி பவனி வரக் காத்திருக்கின்றார்கள்.
எமது அழைப்பு கட்சி சார்ந்ததல்ல. மதம் சார்ந்ததல்ல. இனம் சார்ந்ததல்ல. எமது அழைப்பு தமிழ்மொழி சார்ந்தது. தமிழ் மொழி பேசும் யாவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். எமது பவனி “எழுக தமிழர்” என்று பெயரிடப்படவில்லை. இந்து, முஸ்லீம், கிறீஸ்தவ சகோதரத்துவத்தை அவர்களின் பொது மொழியாம் செந்தமிழ் ஊடாக நிலை நிறுத்தவே எமது பவனியானது “எழுக தமிழ்”என்று பெயர்பெற்றது.
ஏன் தமிழுக்கு முதலிடம் கொடுத்துள்ளீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் கிழக்குமாகாணத்தில் 85 சதவிகிதத்திற்குமேல் தமிழ்ப் பேசுவோர் இருந்தகாலம் போய் தற்போது மூன்றில் ஒருபங்குசிங்களமொழியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. காணிகள் பறிபோயுள்ளன. கலைகள் சிதைவடைந்துள்ளன. கலாச்சாரம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. மொத்தத்தில் “எழுகசிங்களம்”எல்லைதாண்டிவந்து இங்குகுடிகொண்டுள்ளது. சுயநலம் மிக்கஅரசியல்வாதிகளுக்கன்றிமற்றவர்கள் யாவர்க்கும் இது வெள்ளிடைமலை.
இது காறும்ஒடுக்கப்பட்டதமிழ்ப்பேசும் மக்கள் இனியாவதுவிடிவுகாணவே“எழுகதமிழ்”எழுந்துவருகின்றது.
இந்து– முஸ்லீம் மக்களுக்கிடையேயானமுரண்பாடுகள் ஆக்கப்பட்டவையேஒளியஅனவரதமும் அமைந்திருந்தஒருநிலைப்பாடுஅல்ல. அதைத் தற்போதுஎமது முஸ்லீம் சகோதரர்கள் தெரிந்துகொண்டுவருகின்றார்கள். இந்து,கிறிஸ்தவதமிழ் மக்களும் இஸ்லாமியத் தமிழ் மக்களும் காலாதிகாலமாகபிட்டும் தேங்காய்ப்பூவும் போல் இயைந்துசெயற்பட்டுவிட்டுஅண்மைக் காலங்களில் மட்டும் ஏன் முரண்பட்டு இருக்கின்றார்கள் என்பதை இருதரப்பாரும் உணர்ந்துகொள்ளவேண்டும். முரண்பாடுகள் எம்மேல் திணிக்கப்பட்டதேகாரணம்.அவ்வாறுதிணிக்கப்பட்டதற்குஎமதுகுறுகியநோக்கங்கள் கொண்டஅரசியல்வாதிகள் விதிவிலக்கன்று.
தமிழ்ப்பேசும் இந்து,கிறீஸ்தவ, முஸ்லீம் மக்களின்ஒற்றுமையேகிழக்கிலங்கையைக் காப்பாற்றுமேஒளிய“பொங்குசிங்களத்தின்”பயணவேகத்தைவேறெந்தசக்தியாலும் கட்டுப்படுத்தமுடியாது. நாம் தொடர்ந்தும் எமதுவேற்றுமைகளுக்குமுதலிடம் கொடுத்தோமானால் கிழக்குமாகாணம் மொழிமாற்றம் பெறுவதுதிண்ணமே.
தொடர்ந்துவந்தபெரும்பான்மை இனம் சார்பானஅரசாங்கங்கள் யாவும் ஒரேநிகழ்ச்சிநிரலிலேயேசெயற்பட்டுவருகின்றனர். கட்சிகள் மாறினாலும் கரவானகுடியேற்றஎண்ணங்களைஎந்தப் பெரும்பான்மைக் கட்சியும் கண்டிக்கவில்லை;கடியவில்லை. மாறாகத் தாமும் சேர்ந்துவடகிழக்குமாகாணங்களின் குடிப்பரம்பலை,மொழிப்பரம்பலைமாற்றவேசெய்துள்ளார்கள்.
எனவேவடகிழக்கு இணைப்புஎன்பதுதமிழ்ப் பேசும் மக்கள் அனைவரதும் பாதுகாப்புக் கருதியேஎம்மால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. வடகிழக்கு இணைப்பொன்றேதமிழ்ப் பேசும் மக்கள் தொடர்ந்துதமதுவாழ்விடங்களில் நிம்மதியாகவாழவழிவகுக்கும்.
இன சௌஜன்யத்தைக் கெடுக்கப் பார்க்கின்றார்கள்,இன விரிசல்களுக்கு இடமளிக்கப் பார்க்கின்றார்கள் என்றுஎம்மேல் குற்றங்கள் சுமத்தப்படுகின்றன. இதுவரைகாலமும் நடைபெற்றுவரும் இன ஒடுக்கல்கள் பற்றிநாம் கூறினால் அது இனவிரிசலாகப் பெரும்பான்மையினராலும் எம்முள் சிலராலும் அர்த்தப்படுத்தப்படுகின்றன.உண்மையைக் கூறுவதைத் தடுக்க,எம்மைப் பயப்படுத்திவைக்க, இவ்வாறானகுற்றச்சாட்டுக்கள் வழிஅமைப்பனஎன்பதுஅவர்களின் எதிர்பார்ப்புப் போலத் தெரிகின்றது.
இப்பொழுது இருக்கும் சமாதானமானது இன நல்லுறவால் ஏற்பட்டசமாதானம் அல்ல. செயற்கையாகஏற்படுத்தப்பட்டஒன்றே. அதனால்த்தான் இராணுவத்தினரைபெரும் அளவினதாகவடக்கிலும் கிழக்கிலும் வைத்திருக்கவிழைகின்றார்கள் மத்தியில் பதவியில் உள்ளோர்.
எங்களிடம் இருந்துகிடைக்கும் பாதுகாப்புஉங்களுக்குத்தமிழர்களிடம் இருந்துகிடைக்காதுஎன்று கூறிதமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களிடையேசந்தேகங்களையும் ஐயப்பாடுகளையும் வளர்க்கப் பார்க்கின்றார்கள். இவற்றையெல்லாம் களையவேஅனைத்துத் தமிழ்ப் பேசும் மக்களிடையேயும் புரிந்துணர்வைஏற்படுத்தவேண்டியகாலத்தின் கட்;டாயம் தற்போதுஎழுந்துள்ளது.
அரசியல் தீர்வுபற்றிப் பேசும் போதுதமிழ்ப் பேசும் மக்கள் யாவருமேகூட்டாட்சியாகியசம~;டி முறையேசிறந்ததுஎன்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். ஆனால் கடந்தகாலநிகழ்வுகளின் காரணமாகவோவேறுகாரணங்களுக்காகவோதமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்கள் உறுதிதளர்ந்துகாணப்படுகின்றார்கள். தமிழ் மக்கள் தம்மைஒதுக்கிவிடுவார்களோ,தடுத்துவைப்பார்களோஎன்றுஅச்சம் கொள்கின்றார்கள். ஆனால் அரசியல் கட்சியானதமிழ்த் தேசியக் கூட்டமைப்பாய் இருந்தால் என்ன,மக்கள் இயக்கமானதமிழ் மக்கள் பேரவையாக இருந்தால் என்னதமிழ் மொழிபேசும் வடகிழக்குமாகாணங்களில் முஸ்லீம் மக்களுக்காகஒருஅலகைஏற்படுத்துவதில் அவர்கள் தம் பூரணசம்மதத்தையேவெளிக்காட்டிவந்துஉள்ளார்கள்.
வடகிழக்குமாகாணங்கள் பாரம்பரியமாகத் தமிழ் மொழிபேசப்பட்டுவந்தமாகாணங்களேஎன்பதைஉத்தியோகபூர்வமாகப் பதிந்துவைத்திருப்பதுஅத்தியாவசியம் என்பதுதற்பொழுதுஎல்லாத் தமிழ்ப் பேசுந் தரப்பாருக்கும் புரிகின்றது. ஆனால் சந்தேகங்கள்,ஐயப்பாடுகள்,மக்களைஒருங்கிணைக்கவிடாதுதடுக்கின்றன.
“எழுகதமிழ்”அரசியல் சார்ந்ததுஆனால் அரசியற் கட்சிகள் சார்ந்ததல்ல. சமூகம் சார்ந்ததுஆனால் சமயங்கள் சார்ந்ததல்ல. தமிழ் மொழிசார்ந்ததுஆனால் தமிழ் மொழியல்லாதவற்றைப் புறக்கணிக்காதது.
தமிழ்மொழிக்கும் அதைப் பேசும் மக்களுக்கும் தக்கஏற்பினைவழங்கவேண்டும் என்றுகேட்டே“எழுகதமிழ்” இம்மாதம் 10ந் திகதிநாவற்குடாவிவேகானந்தாவிளையாட்டுக் கழகத்திடலில் நடைபெற இருக்கின்றது. அதில் சகலரும் பங்குபற்றவேண்டும் என்றுகோரிஎமதுஒற்றுமையினைஉலகறியச் செய்ய இது ஒருநல்லதருணம் என்று கூறிவைக்கின்றேன்.
வாழ்கதமிழ்! எழுகதமிழ்!
நன்றி
அன்புடன்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
இணைத்தலைவர்
தமிழ் மக்கள் பேரவை
0 Comments:
Post a Comment