கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் திருகோணமலை கிண்ணியா ஆயிலியடி விவசாய வீதி புனரமைப்புச் செய்யப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்வும் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள்
வழங்கும் நிகழ்வும் புதன்கிழமை (08.02.2017) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், மாகாண விவசாயப் பணிப்பாளர், திணைக்கள அலுவலர்கள் பயனாளிகள், மற்றும் பிரதேச விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
இதன் போது கிழக்கு மாகாண விவசாய விவசாயத் திணைக்களத்தினால் 2.5 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட ஆயிலியடி விவசாய வீதி விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.
அத்துடன், பிரதேச விவசாயிகளுக்கு விவசாய ஊக்குவிப்பு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment