(பழுகாமம் நிருபர்)
இந்து மதம் அழிந்து கொண்டும், தேய்வடைந்தும் கொண்டும் செல்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். மன்றத்தின் பொங்கல் விழா நிகழ்விலே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.,
எமது பிரதேசத்தில் இந்து மதம் அழிந்து கொண்டும், தேய்வடைந்தும் கொண்டும் செல்கின்றது
என்பதையே என்னால் கூற முடியும் ஏனென்றால் எமது இந்து மதத்திற்கு கட்டுப்பாடுகள் மிகக்குறைவு. காரணம் ஆதியிலே தோன்றிய மதம் எப்போது தோன்றிய மதம் என்று எவருக்குமே தெரியாது. உலகினிலே முதலில் தோன்றிய மதமாக அனைவராலும் கருதப்படுகின்றது. அந்தவகையில் எமக்கென்று இறுக்கமான கட்டுப்பாடு இல்லாமல் சென்றுவிட்டது. ஏனைய மதங்களை எடுத்துக்கொண்டால் அம்மதம் யாரிடம் இருந்து எப்போது உருவானது என்னும் வரலாறு இருக்கின்றது. அம்மதங்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்கின்ற கட்டுப்பாடு இருக்கின்றது. உதாரணமாக நான் பல நாட்டிற்கு சென்றிருக்கின்றேன். ஆனால் குடியேற்ற நாடாக அபிவிருத்தியடைந்த நாடாக கனடாவை பார்க்கக் கூடியதாக இருந்தது. இந்நாடு ஏனைய நாடுகளைப் போலல்லாது திட்டமிட்டபடி கட்டிடங்கள், வீதிகள் அனைத்தும் அமையப்பெற்றுள்ளன. இந்து மதத்தை தவிர்ந்த ஏனைய மதங்கள் கட்டுப்பாட்டுடன் ஒருநாள் கட்டாயமாக தங்களின் வணக்கஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதுமாத்திரமல்ல ஏனைய மதத்தவர்களை எமது மதத்திற்குள் கொண்டுவர முடியாத காரியம். அதை நம்மவர்கள் விரும்புவதுமில்லை. ஆனால் ஏனைய மதத்தவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தங்கள் மதங்களை பரப்புவதிலும் வளர்ப்பதிலும் மும்மூரமாக இருப்பார்கள். அதுமாத்திரமல்லாமல் அவர்கள் தங்களின் சமூகத்தின் வளர்ச்சி, கல்வி வளர்ச்சியிலும் அக்கறை கொண்டவர்களாக செயற்பட்டு வருகின்றார்கள். இதனால் அவர்களின் சமூகம் துரிதமாக வளர்ச்சி அடைகின்றது. எமது சாமூகம் கடந்த காலங்களில் பாதிப்பிற்குள்ளாகி இருந்தாலும் மந்தமாக வளர்ச்சி அடைகின்றது எனவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment