“போதையற்ற சகவாழ்வுடன் கூடிய நாடு” என்ற ஜனாதிபதியின் போதையொழிப்புத் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பிலுள்ள எட்டு நகரப் பாடசாலைகளில் மாணவர்களின் காலை
ஒன்று கூடலின்போது சுமார் 30 நிமிடங்கள் போதைப் பொருளால் ஏற்படும் விபரீதங்கள் பற்றி விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக
மட்டக்களப்பு “விமோச்சனா” மதுப்பாவனையாளர் புனர்வாழ்வு இல்ல நிறைவேற்றுப் பணிப்பாளர் செல்விகா சகாதேவன் nரிவித்தார்.
இதுபற்றி திங்கட்கிழமை 06.02.2017 கருத்துத் தெரிவித்த அவர், மட்டக்களப்பில் ஏற்கெனவே போதைப் பொருள் பாவனைக்கு அடிiமாயகி இருப்போரை மீட்டெடுப்பதும், புதிதாக போதைப் பொருளுக்கு அடிமையாகாமல் தடுக்கும் நோக்கலும் இந்த விழிப்புணர்வுச் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைவாக மட்டக்களப்பு நகரப் புறத்திலுள்ள இந்துக்கல்லூரி, புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம், மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம், ஆனைப்பந்தி மகாவித்தியாலயம், புனித திரேசா பாடசாலை, சிசிலியா பெண்கள் பாடசாலை, இக்னேசியஸ் வித்தியாலயம், திராய்மடு தமிழ் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் போதைப் பொருள் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
கருத்தரங்கில் போதைப் பொருள் விழிப்புணர்வு பற்றிய கையேடுகளும் விநியோகிக்கப்படுகின்றன.
எதிர்கால மாணவர் சமுதாயம் “குடி நோயாளிகளாக” வருவதைத் தடுப்பதற்காகவே மாணவர்கள் மத்தியில் போதையொழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment