ஏறாவூர் ஸ்ரீகணேசகாளிகா ஆலயத்தின் மாஞ்சோலை மணி மண்டபத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக இடம்பெற்றது.
முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர், மற்றும் பிரதேச மக்களின் நிதிப் பங்களிப்புடன் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் 500 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கக் கூடிய இந்த மண்டபம் நிருமாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், எஸ். வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரெட்ணம், மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல், ஏறாவூரப்பற்று பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம், முன்னாள் நகர சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூதின் இணைப்பாளருமான ஜே.எம். முஸ்தபா உட்பட இன்னும் பல அதிதிகளும் ஸ்ரீகணேச காளிகா ஆலய அறங்காவலர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது, கலை நிகழ்வுகளும் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment