கிராமசேவை உத்தியோகத்தர் சோசுந்தரம் விக்னேஸ்வரனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு
விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதுடன், விசேட பொலிஸ்குழு அமைத்து விசாரணையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஒந்தாச்சிமடத்தில் கடமையாற்றிய கிராமசேவை உத்தியோகத்தர் கடந்த 15.04.2016 மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் எருவில் சிவபுரம் எனும் இடத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்திருந்தனர்.
குறித்த வழக்கில் கிராமசேவை உத்தியோகத்தர் சார்பாக ஆஜராகியிருந்த சட்டதரணி மரணம் தொடர்பான பொலிசாரின் விசாரணை அறிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டியிரந்தார்.
இதன் அடிப்படையில் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் எம்.ஜ.எம் றிஸ்வி பொலிஸ்மா அதிபருக்கு இவ்விசாரணை தொடர்பான அறிக்கையை விரைவாக சமர்;பிக்க நடடிவடிக்கை எடுக்குமாறு பணித்திருந்தார்.
இந் நிலையில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணை திங்கட் கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது விசேட குழு அமைந்து விசாரணையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஜராகியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment