மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை (03.02.2017) பணிப்பகிஷ்கரிப்பில்ஈடுபட்டனர். சயித்தம் (SAITM) தனியார் மருத்துவக் கல்லூயின் மருத்துவ பட்டதாரிகளை இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவதற்று நீதிமன்றம் அனுமதியளித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காலை 6.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை இந்த பணி பகிஸ்கரிப்பு இடம்பெறவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஒருவார காலத்தினுள் தங்களுக்கு திருப்தியான பதில் கிடைக்காதவிடத்து தங்களது பணிப் பகிஷ்கரிப்பு தொடர்ச்சியாக இடம்பெறும் என மேலும் தெரிவித்தனர்.
வைத்தியர்கள் கடமைக்கு சமூகளித்திருந்த போதும் நோயாளிகளைப் பார்வையிடவில்லை இதனால் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் உள்ளிட்ட முழு சேவைகளும் ஸ்தம்பிதமடைந்ததோடு நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர்.
0 Comments:
Post a Comment