8 Feb 2017

ஊடக விற்பன்னர்களாக வளர்ச்சி பெறுவதற்கு பன்மொழிப் புலமை மிக இன்றியமையாதது- பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதானி அமீர் குசைன்

SHARE
பல்மொழித் திறமை இருக்குமானால் ஊடக விற்பன்னர்களாக மாறக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதுடன், உலகிலுள்ள செய்தி முகவர் நிறுவனங்களுடன் பிரதேச ஊடகவியலாளர்கள் தொடர்புகளை வைத்திருக்ககூடிய உழைப்பினைச் சிறந்த முறையில் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் உருவாகும் என்று இலங்;கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதானி அமீர் குசைன் தெரிவித்தார்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கான 3 மாதா கால ஆங்கில மொழிப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமீர் குசைன்,

ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் மொழி என்பது மிகவும் முக்கியமானதொன்று எந்தத்துறையானாலும் பல்மொழித் தேர்வு மிக முக்கியமானது. குறிப்பாக ஊடகத்துறையை எடுத்துக் கொண்டால் பல்மொழித் தேர்வு மிகவும் முக்கியமானது. நாம் வாழுகின்ற பிரதேசத்தில் ஒரு மொழியை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு ஊடகம் செய்வதென்பது இலகுவான காரியமல்ல. குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அனைத்து நிருவாக விடயங்களும் தமிழ் மொழி மூலம் நடைபெற்றாலும் இங்கு சிங்களம் அல்லது ஆங்கில மொழியுடனனான தொடர்புகள் மூலம் பலவிதமான ஊடக நடத்தைக்குரிய தகவல்களைத் தேடி பெற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.

அவ்வேளைகளில் தமிழ் மொழிக்கு மேலதிகமாக ஆங்கில மொழி அறிவு இருக்குமானால் அந்த விடயங்களை சிறப்பான முறையில் செய்து கொள்ள முடியும்.
அதே பொன்று ஊடகம் என்பது வெறுமனே நாங்கள் வாழுகின்ற பிரதேசத்திற்குத் தகவல்களை வழங்குவது. அல்லது ஒரு இனத்திற்கு சமூகத்திற்கு தகவல்களை வழங்குவது மல்ல. நாங்கள்  பெறுகின்ற தகவல்கள் சர்வதே முக்கியத்தவம் வாய்ந்தவைகளாக இருக்கலாம். இன்றுவெறுமனே செய்திகளை பத்திரிகைக்கு அனுப்பிய காலம் முடிந்து ஒவ்வொருவம் தனியாக ஒரு செய்தி ஏட்டை நடத்தவது போன்று அல்லது செய்தி நிறுவனத்தினை நடத்துவது போன்று வாய்ப்புகள், கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சமூக வலைத்தளங்கள் அதனைத் துரிதப்படுத்தியிருக்கின்றன. இன்று அனைவரும் சமூக ஊடகம் என்ற வகையில் முகப்புத்தகங்களை செய்தி பரிமாற்றத்துக்காக பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். அல்லது ஒரு இணையத்தளச் செய்தியேட்டை நடத்தக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.  ஈ.நியுஸ் லெற்றஸ் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

செய்தியாளர்களாக வருகின்ற போது வெறுமனே ஒரு பத்திரிகைக்கு மாத்திரம் செய்தியை அனுப்பி அதனால் உழைப்பு என்பது மிகச்சிரமமான காரியம். ஏனென்றால் பிரபல ஊடகவியலாளர்களிடம் கேட்டால் அது மிகவும் சொற்பந்தான். ஆனால் பல்மொழித் திறமை இருக்குமானால் அவர்கள் ஊடக விற்பன்னர்களாக மாறக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இன்று உலகிலுள்ள செய்தி நிறுவனங்களுடன் பிரதேச ஊடகவியலாளர்கள் தொடர்புகளை வைத்திருக்கிறார்கள்.

இருந்தாலும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அதனோடு இடைந்த பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு கடந்த 13 வருடங்களாக இலங்கை முழுவதிலுமுள்ள ஊடகவியலாளர்களை ஒன்று திரட்டி அவர்களுக்குத் தேவையான ஊடகத்துறை தொடர்பான கடமையின் போது ஊடகம் கற்பித்தல், அதனோடு ஊடகத்துறையில் தேவைப்படுகின்ற பல்வேறு விதமான துறைகள் சம்பந்தமான தெரிவு செய்யப்பட்ட செய்தி எழுதுதல், செய்தியை எடிற் செய்தல், சிறுவர்கள் தொடர்பான செய்தி அறிக்கையிடல். தேர்தல் கால செய்தி அறிக்கையிடல், புலனாய்வுச் செய்தி அறிக்கை இடல் என்ற அடிப்படையில் பயிற்சிகளை வழங்கி வருகிறது. மட்டக்களப்பிலும் இவ்வாறானன பயிற்சிகளை நடத்தியிருக்கிறோம். அந்தவகையில் ஆங்கில வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் உதவி நிதி முகாமையாளர் சலனி தினுசிகா சமரநாயக்க, கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் இ.தேவஅதிரன், கிழக்குப்பல்கலைக்கழக ஆங்கில கற்கைகள் அலகின் முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளரும் ஊடகவிரியலாளர்களுக்கான ஆங்கிலக் கற்கை விரிவுரையாளருமான ஸ்ரீபன் எம் பீலிக்ஸ் ஆகியோரும் ஆரம்ப நிகழ:வுகளில் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: