கிழக்கு மாகாண விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளந்தண்டு வலி, பார்வைக் குறைபாடு உட்பட மற்றுமுள்ள நோய்களுக்கான இலவச சிகிச்சை முகாமும் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வும்; ஞாயிறன்று மட்டக்களப்பு மஹாஜன கல்லூரியில் இடம்பெற்றதாக அதன் தலைவர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.
முற்கூட்டியே பதிவு செய்யப்பட்ட 30 ஆண்களுக்கும் மற்றும் 30 பெண்களுக்குமாக 60 பேருக்கு இந்த இலவச சிகிச்சை முகாமில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜேர்மனியைச் சேர்ந்த வைத்திய நிபுணர் ரெயின்கில்ட் இசன்ஸ்ஸியால் பயிற்றப்பட்ட 20 பேர் கொண்ட குழுவினர் இந்த சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு சிகிச்சையளித்துள்ளனர்.
அத்தோடு கண்பார்வை குறைந்தவர்கள் பரிசோதிக்கப்பட்டு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கலும் இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment