9 Feb 2017

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (13.02.2017) காலை 9.30 மணிக்கு ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறும் என்று பிரதேச செயலாளர்
எஸ்.எல். முஹம்மத் ஹனீபா அறிவித்துள்ளார்.

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத் தலைவர்களான அரசியல்வாதிகள் இக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் 2017ஆம் ஆண்டில் அமுலாக்கப்படுகின்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் பற்றி ஆராயப்படுகின்ற அதேவேளை, அமுலாக்கப்படவிருக்கின்ற புதிய அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய முன்மொழிவுகளும்  இடம்பெறும் என்றும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: