17 Feb 2017

கல்முனை மாநகரசபையின் வளங்கள் தமிழ் மக்களுக்கும் சரியாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் தெரிவிப்பு

SHARE

(டிலா.எம்.ஆர்)
கல்முனை மாநகரசபையின் வளங்கள் மக்களுக்கும்   சரியாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை தமிழ்ப்பிரிவு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கே.கோடீஸ்வரன் தெரிவித்தார்.
கல்முனைத தமிழ்ப்பிரிவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் (14.02.2017)  நடைபெற்றது. இங்கு தலைமைதாங்கி உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,
கல்முனை மாநகரசபை எல்லைக்குள் சாய்ந்தமருது, கல்முனை, கல்முனை தமிழ்ப் பிரிவு என மூன்று பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன. ஆனால் தமிழ் பிரதேசங்களில் குப்பைகளை அகற்றுவதற்கு வாகனங்கள் வருவதில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றார்கள். இந்தநிலை மாற வேண்டும். குப்பைகளை அள்ளுவதற்கு வாகனங்கள் போதாது என்றால் தேவையான வாகனத்தை என்னால் பெற்றுத்தர முடியும்..
தற்போது 13 வாகனங்கள் இருக்கின்றன. இந்த வளங்கள் சரியாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அவ்வாறு பகிர்ந்தளிக்கப் படும் போது தமிழ் பிரதேச செயலகத்திற்கு குறைந்தது 4 வாகனங்கள் கிடைக்கும். இதன்மூலம் அதிகமான குப்பைகளை அகற்றமுடியும்.
பிரதேச மட்டத்திலுள்ள பிரச்சினைகள் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும். இங்கு முடியாவிட்டால் மாவட்ட மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு அந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கா விட்டால்தான் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஆகவே இது ஒரு பெறுமதியான கூட்டமாகும். 
கல்வித் திணைக்களத்தின் சார்பில் இங்கு வந்திருக்கும் அதிகாரி கல்முனை கார்மல் பற்றிமா கல்லூரிக்கு எனது முயற்ச்சியால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 72 மில்லியன் ரூபா தொடர்பில் தெரியாது என பொறுபிபில்லாமல் கூறமுடியாது. தமிழ் கோட்ட பாடசாலைகளின் தேவைகள் பற்றிய முன்மொழிவுகள் எவற்றையும் சமர்ப்பிக்கவில்லை.
எதிர்வரும் காலங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். என்றார். இந்தக் கூட்டத்தில் கிராமமட்டத்திலுள்ள பல பிரச்சினைகள் ஆராயப்பட்டன.
இங்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை விவசாயத்துறை அமைச்சருமான ரி.நவரட்னராஜா உரையாற்றினார்.
பிரதேசசெயலாளர் கே.லவநாதன், திணைக்களங்களின் தலைவர்கள், கிராம மட்டத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: