3 Feb 2017

வெள்ளத்தினால் துர்ந்து போன ஆனைகட்டியவெளி – மண்டூர் பாதை புனநிர்மானம்.

SHARE
 (பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசத்தில் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஆனைகட்டியவெளி – மண்டூர் செல்லும் விவசாய வீதியானது கடந்த வெள்ளஅனர்த்தினால் பயன்பாட்டிற்கு உதவாத முறையில் துர்ந்து போயிருந்தது. இதனை போரதீவுப்பற்று பிரதேச சபையினர் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற முறையில் மாற்றியமைத்தனர். 


இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அப்பிரதேச வாசிகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்ததற்கமைவாக அப்பகுதிக்கு விஜயம் செய்த மாகாணசபை உறுப்பினர் உடனடியாக அவ்விடத்தில் இருந்து போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் அ.ஆதித்தன் அவர்களோடு தொடர்பு கொண்டு அவ்வீதியினை செப்பனிடுவதற்கு கோரியதற்கமைவாக 02.01.2017ம் திகதியில் இருந்து மூன்று நாட்களுக்கு அந்த வீதி மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த வீதியினை அரசாங் உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள், மற்றும் விவசாயிகள் அதிகளவாக பயன்படுத்து குறிப்பிடத்தக்கது. விவசாய வீதியாக இருந்த போதிலும் மக்களின் உடனடித்தேவையாக இருந்தமையினால் மக்கள் பயன்பாட்டிற்கு மாற்றியதாக போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் அ.ஆதித்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் அவர்களும் குறித்த பிரதேசத்திற்கு பிரசன்னமாகியிருந்தார். 










SHARE

Author: verified_user

0 Comments: