3 Feb 2017

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் புத்தகங்கள் மற்றும் பக்கவாத்தியக் கருவிகள் கையளிப்பு

SHARE
(துறையூர் தாஸன்)

கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஆளுனரின் நிதியொதுக்கீட்டின் கீழ் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட கலைமன்றங்களுக்கு பக்கவாத்தியக் கருவிகளும்,
எழுத்தாளர்களின் புத்தகங்கள் திணைக்களத்தினால் அச்சிடப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க் கிழமை (31) மாலை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரிகலை அரங்கில் இடம்பெற்றது.

கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெத்தினத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 

மாகாணத்தில் சிறப்பாக இயங்கிய மூன்று தமிழ்க் கலை மன்றங்களுக்கும் ஆறு இஸ்லாமியக் கலைமன்றங்களுக்கும் அவர்களால் கோரப்பட்ட பக்கவாத்தியக் கருவிகள் இதன் போது வழங்கிவைக்கப்பட்டன.

மேலும் கலையிலக்கியத் துறையில் ஆர்வமிருந்தும் அவற்றைபுத்தகங்களாக வெளியீட முடியாமல் உள்ள எழுத்தாளர்களின் ஆக்கங்கள் கோரப்பட்டு அவற்றில் தெரிவுசெய்யப்பட்ட ஏழு தமிழ்மொழி மூலமான புத்தங்கள் அச்சிடப்பட்டு உரிய ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டன. இவ் ஏழு புத்தகங்களுக்குமான நயவுரையும் இதன் போதுநிகழ்த்தப்பட்டன.

கலாசார உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாணபண்பாட்டலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர், சஞ்சிகையாசிரியர்கள், கலைமன்றங்களின் நிர்வாக பிரதிநிதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், கலையார்வலர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டோர் இதன்போது கலந்து கொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: