தமிழ் மக்கள் பேரவைக்கும் முஸ்லிம் பொது அமைப்புக்கும இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத்திற்கும் தமிழ் மக்கள்
பேரவைக்கும் இடையில் நடைபெற்ற இந்த சந்திப்பு மட்டக்களப்பு கூட்டுறவு நிலையத்தில் நடைபெற்றது.
தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான சி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளன உறுப்பினர்கள் தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
வடகிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், வடகிழக்கில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment