கிழக்கின் எழுக தமிழ் இன்று மட்டக்களப்பில் உணர்ச்சி பூர்வமாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் த.வசந்தராஜா தலைமையில் நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. கல்லடி மணிக்கூண்டுக் கோபுரத்தடியில் ஆரம்பமான எழுக தமிழ் பேரணி மைதானம் வரை நடைபவனியாக மக்கள் சென்றனர். இங்கு ஈகைச்சுடரேற்றலுடனும்,
தமிழ் மொழிவாழ்த்துடனும் ஆரம்பமானது. எழுக தமிழ் பிரகடனத்தினை இணைத்தலைவர் அவர்களால் வாசிக்கப்பட்டது.
இதில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண மாண்புமிகு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், மட்டக்ளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், ஈ.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், த.தே.ம.முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கை தமிழரசு கட்சியின் துணைத்தலைவர் பேராசிரியர் எஸ்.சிற்றம்பலம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள், காணாமல் செய்யப்பட்டோரின் உறவுகள், அம்பாறை மாவட்ட மக்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment