7 Jan 2017

பாண்டிருப்பு அகரம் சமூக அமைப்பினால் விருந்து எனும் பல்சுவை இதழ் வெளியீடு.

SHARE
(துறையூர் தாஸன்)

பாண்டிருப்பு அகரம் சமூக அமைப்பு ஊடாக வெளியீடு செய்யப்பட்ட பல்சுவை விருந்து எனும் சிற்றிதழ் வெள்ளிக்கிழமை (06) மாலை கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலககேட்போர் கூடத்தில் அகரம் அமைப்பின் தலைவரும், விருந்து இதழின் ஆசிரியருமான செ.துஜியந்தன் தலைமயில் நடைபெற்றது.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், கிழக்குமாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா, கல்துனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் க.லவநாதன், சட்டத்தரணி பாடும்மீன் சு.ஸ்ரீந்தராஜா, மூத்தகவிஞர் மு.சடாட்சரன், எழுத்தாளர் அரசரெத்தினம்  மற்றும் கல்விமான்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இதன்போதுகலந்து கொண்டனர்.  

பாண்டிருப்பு ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலயபிரதம குரு சிவஸ்ரீ மு.சபாரெத்தினம்  குருக்களின் ஆசியுடன் எழுத்தாளர் அரசரெத்தினம் விருந்தின் வெளியீட்டுரையையும், நூலின் நயவுரையினை சட்டத்தரணி பாடும்மீன் சு.ஸ்ரீந்தராஜாவும் நிகழ்த்தினர்.

சிற்றிதழாசிரியர் செ.துஜியந்தனினால் விருந்து சஞ்சிகையின் முதல் பிரதியை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் மற்றும் கிழக்குமாகாண சபை உறுப்பினர் நடராஜா ஆகியோருக்கு இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

பின்னர் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு நாடாளுமன்றஉறுப்பினர் கோடீஸ்வரனால் சஞ்சிகையின் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




























SHARE

Author: verified_user

0 Comments: