(துறையூர் தாஸன்)
மகிழூர்முனை சனசமூக நிலையத்தை புனரமைப்பதற்கான பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை (06) மேற்படி சனசமூக நிலையமண்டபத்தில் மகிழூர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் இ.மதிதரன் தலைமையில் நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் சனசமூக உத்தியோகத்தர் ஆர்.பிரபாளினி, மகிழூர்முனைகிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் வே.தியாகராஜா, சமாதானநீதவான் ஆ.கெங்காசலம் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருந்த சனசமூக நிலையமானது தற்போது நிர்வாக ரீதியாக புனரமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது, இக்கிராம முன்னேற்றத்திற்கு புதிதாக அமையப் பெறுகின்ற இச்சனசமூக நிலைய நிர்வாகத்தினர் பாரிய பங்களிப்பினை நல்கி பக்கபலமாக இருப்பதுடன் ஊர்ச் சமூகமும் முன்வரவேண்டு எனமகிழூர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் இ.மதிதரன் இதன்போது குறிப்பிட்டார்.
புதிய ஆண்டில் புதியதாக அமைகின்ற சனசமூகநிலைய நிர்வாகத்தினர் சமூகம் மற்றும் பயில்கின்ற மாணவர்களின் தேவைகளையறிந்து அத் தேவைகளை நிறைவேற்றுபவர்களாக செயற்படுவதுடன் கிராமத்தின் முன்மாதிரியாகதிகழவேண்டும்.
என இதன்போது கலந்து கொண்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் சனசமூக உத்தியோகத்தர் ஆர்.பிரபாளினி தன்போது தெரிவித்தார்.
இச்சனசமூக நிலையத்தின் புதிய செயலாளராக ப.அசோகனும் தலைவராக த.ஜெயகாந்தனும் பொருளாளராக வே.தியாகராசாவும் உப தலைவராக வே.ஜெனோறியசும் உப செயலாளராக க.உத்தமன் ஆகியோருடன் அ.சிவலிங்கம், ர.லியுரன், மா.கோகிலவேந்தன், சு.கலைச்செல்வன், மா.இராசதுரை, சா.வேலுப்பிள்ளை போன்றோர் நிர்வாக உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
0 Comments:
Post a Comment